தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது அணியினர் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த தேர்தல் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, ராதிகா சரத்குமார், ரா. பார்த்திபன், நாசர். பி.வாசு உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டு எண்ணிக்கை நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்தது. அதில் விஷால் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விஷால் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்தது. எனவே, விஷால் அணியினர் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.