தயாரிப்பாளர் சங்க தேர்தல் : விஷால் வெற்றி

08:00 மணி

தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த தேர்தல் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, ராதிகா சரத்குமார், ரா. பார்த்திபன், நாசர். பி.வாசு உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டு எண்ணிக்கை நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்தது. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் 478 ஒட்டுகளும், ராதாகிருஷ்ணனும் 335 ஓட்டுகளும் , கே.ஆர் 224 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com