Thupparivalan 2 – மிஷ்கினும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர்.

மிஷ்கினும், விஷாலும் துப்பறிவாளன் படம் மூலம் முதன் முதலில் இணைந்தனர். 2017ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கணியன் பூங்குன்றன் கதாபாத்திரத்தில் துப்பறியும் கதாபாத்திரத்தில் விஷால் அசத்தி இருந்தார். ஹாலிவுட்டில் வெளியான ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் பிரசன்னா, வினய், சிம்ரன், பாக்கியராஜ் ஆண்டிரியா ஆகியோரும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  வெளியானது ‘விஸ்வாசம்' படத்தின் ‘அலப்பறை’ தீம் மியூசிக்!

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என விஷால் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் மிஷ்கின் விஷாலை சந்தித்து பேசியுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  திட்டம் போட்டு திருடுற கூட்டம் பா்ஸ்ட் லுக்

எனவே, துப்பறிவாளன் 2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.