நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷிகண்ணா, இந்த படம் வெளியாகும் முன்னரே விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில்தான் விஷால், ராஷிகண்னா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தை வெங்கட்மோகன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

லைட் ஹவுஸ் மூவிமேக்கர் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் இன்னும் ஒரு பிரபல நடிகையும், நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.