சமீபத்தில் நடந்து முடிந்த விஷாலின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தி அனுப்பிய நிலையில் டிடிவி தினகரன் இன்று நேரடியாக விஷால் வீட்டுக்கே சென்று வாழ்த்து கூறினார்.

விஷாலுக்கு தலைவர் ஆகும் தகுதி உள்ளது என்றும் அவர் அரசியலில் நுழைந்தால் சந்தோஷப்படும் முதல் நாள் நான் தான் என்றும் விஷாலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்தார்

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் பல புரட்சிகளை செய்து வரும் விஷால் தமிழக அரசியலிலும் புரட்சி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்