இளையராஜாவுக்கு விழா எடுக்கும் விஷால்

தமிழ் திரைப்பட தயாாிப்பாளா் சங்கத் தோ்தலில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தோ்தலில் 3 அணிகள் மோதியது. தாணு ஒரு அணியாகவும், விஷால் மற்றொரு அணியாகவும் மோதியது. வெற்றி பெற்ற விஷால் நன்றி தொிவித்தாா். இந்த தயாாிப்பாளா் சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது ஏப்ரல் 6ம் தேதி மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

விஷால் தலைமையிலான நிா்வாகிகள் இளையராஜாவைத்து அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினாா்கள். இந்த சந்திப்பில் தயாாிப்பாளா் சங்கத் தலைவா் விஷால், துணைத் தலைவா் பிரகாஷ் ராஜ், செயலாளா்கள் ஞானவேல் ராஜா மற்றும் கதிரேசன், பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து பத்திாிக்கையாளா்களை சந்தித்த விஷால் பேசியதாவது, இந்த தருணம் என் வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. இளையராஜாவோடு 30 நிமிடங்கள் பேசியது இன்னும் வாழ்க்கையில் உழைக்க வேண்டும் என்ற உந்து சக்தியை  ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஒரு விழா நடத்தஉள்ளளோம். இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும்.  இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது , இது வரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும். இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் ஒரு விழாவாக இவ்விழா இருக்கும். இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார். நாம் சிரிக்கின்றபோதிலும் , நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம். அதற்க்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. இவ்விழா பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும் என்றார்.