Actor J.K. Ritees – நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மரணம் நம்ப முடியவில்லை என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

கானல் நீர், நாயகன், எல்.கே.ஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவரும், அரசியலில் வலம் வந்தவருமான ஜே.கே.ரித்திஷ் இன்று மாலை மாரடைப்பில் திடீர் மரணமடைந்தார். அவரின் மரணம் அவரின் ஆதரவாளர்களுக்கும், சினிமா துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் “வாழ்க்கையில் சில விஷயங்கள் எதிர்பாராமல் நடந்து விடுகிறது. என்னுடைய நல்ல நண்பர் ஜே.கே.ரித்திஷ் மரணமடைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் போதுதான் எனக்கு அவர் நெருக்கமானார். அவரை மறைந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு சக்தியை கொடுக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.