நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலின் உறவினர் கசின் பார்கவ் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

நடிகா் விஷால் உறவினரான கசின் பார்கவ் தற்கொலை செய்துகொண்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அதில் அவா் கூறியதாவது,

பார்கவ் நீ உயிரை மாய்த்திருக்கக் கூடாது. இதை என்னால் நம்ப முடியவில்லை. என் சொந்த சகோதரனை இழந்து விட்டேன். இந்த குற்ற உணா்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது. நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்பதை ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் இப்படி? உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேனே. இதை நான் டைப் பண்ணும்போது அழுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இப்படியொரு உருக்கமான பதிவை விஷால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தி அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலின் உறவினர் பார்கவ் தற்கொலை செய்துகொண்ட செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.