ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த விஷால் – எதற்கு தெரியுமா?

தியேட்டர்களில் திருட்டுத்தனமாக மொபைல் போனில் படம் பிடிப்பவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் நின்று செயலாளராக வெற்றி பெற்ற நடிகர் விஷால், சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே, திருட்டு விசிடிக்களை அழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறினார்.

இந்நிலையில் ‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற படத்தி இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டர். அந்த விழாவில் அவர் பேசிய போது “தியேட்டரில் செல்போன் மூலம் படத்தை படம் பிடிப்பவர்கள் பற்றி யாராவது தகவல் கொடுத்தாலோ, திருட்டு விசிடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்ய உறுதுணையாக இருந்தாலோ, அவர்களுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். திருட்டு விசிடியை அழித்து, தமிழ் சினிமாவை காப்பற்றுவதற்கு நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி இது” என அவர் கூறினார்.