நடிகர் மற்றும் நடிகர் தனுஷ் தரப்பிற்கு இடையே எழுந்துள்ள மோதலால் மாரி 2 படம் வெளியாதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து ஏற்கனவே வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்திற்கு ரிலீஸ் தேதி ஒதுக்கித்தரும் படி மாரி2 பட தாயரிப்பு குழு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியது. ஆனால், நேரிலும், பலமுறை தொலைப்பேசியிலும் தொடர்பு கொண்டும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் சேதுபதி , தனுஷ் படங்களுக்கு தடை ! – ஹைதராபாத் நீதிமன்றம் அதிரடி !

இதனால் கோபமடைந்த தனுஷ் மாரி 2 டிச. 21ம் தேதி வெளியாகும் என உறுதியாக கூறி விட்டாராம். மாரி 2 படக்குழுவில் தொடர்புடைய ஒருவர் பேசிய ஆடியோவும் சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் வெளியாகியது. இதைக்கேட்ட விஷால் டென்ஷன் ஆகிவிட்டாராம்.

இதையும் படிங்க பாஸ்-  ஜப்பானில் ரிலீஸாகும் தனுஷ் படம்!

எனவே, மாரி 2 டிச.21ம் தேதி வெளியாவதை தடுக்கும் முயற்சியில் விஷால் ஈடுபட்டுள்ளதால் மாரி2 சொன்ன தேதியில் வெளியாகுமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.