மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் இன்று முதல் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழகத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் விஷால் 5 பேர் கொண்ட ஒரு பறக்கும்ப படை குழுவை நியமித்துள்ளார். இந்த பணிகளில் விஷால் நற்பணி மன்றத்தை சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்களாம்.

இவர்களது பணி என்னவென்றால், திரையரங்குக்குள் செல்போனில் யாராவது படம் பிடிக்கிறார்களா? திருட்டுத்தனமாக யாராவது படத்தை வீடியோ எடுக்கிறார்களா? என்பதை கவனிப்பதாகும். அப்படி யாராவது செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ படம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை உடனடியாக காவல்துறையிடம் பிடித்து ஒப்படைக்கும்படி விஷாலிடமிருந்து ஆர்டர் சென்றிருக்கிறதாம்.

இவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளையும் கண்காணிக்க உள்ளார்களாம். இதற்காக இந்த பறக்கும் படைக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒவ்வொரு திரையரங்குக்கும் யார், யார்? வருவார்கள் என்பது குறித்து ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளருக்கும் விஷால் தரப்பில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.