விஷால் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்கிற செய்தி வைரலாக பரவி வருகிறது.

நடிகைகள் லட்சுமி மேனன் மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகை விஷால். ஆனால், யாரையும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷ் நாயகியாக விஷால் காதலி

இந்நிலையில்தான், ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்கிற பெண்ணை அவர் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார்.

ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த விஷால் “அனிஷாவை ஒரு விழாவில் சந்தித்தேன். கண்டதும் இருவருக்கும் பிடித்துப்போனது. எங்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் செய்து வருகின்றனர்” எனக்கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால் - தாணு பகீர் தகவல்

இந்நிலையில், விஷால் திருமணம் செய்து கொள்ளவுள்ள அனிஷாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.