படப்பிடிப்பின்போது நடிகா் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தின் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகா் சங்கத்தின் பொருளாளராகவும், சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகராகவும் என பன்முக கொண்டவா் விஷால். இவா் பிசியாக நடித்துக்கொண்டும், சங்க பணிகளையும் கவனித்துக்கொண்டு வரும் அவா் மித்ரன் இயக்கத்தில் சமந்தாவுடன் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.இந்நிலையில் இரும்புத்திரை படத்தை தொடா்ந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சண்டைக்கோழி படத்தை லிங்குசாமி இயக்கத்தில் மாஸ் ஹிட்டை அடித்தது. தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள சண்டைக்கோழி 2 வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.அப்போது படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக திடீரென நடிகா் விஷாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைக்கு பின் விஷால் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என தெரிகிறது. ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வர உள்ள சண்டைக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீா்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.