சரத்குமார் படம் ரிலீசாகிறது என்றால் எவ்வளவு பெரிய படங்கள் வெளிவந்தாலும் கணிசமான திரையரங்குகளில் அவருடைய படமும் வெளியாகி கல்லா கட்டும். ஆனால், தற்போது நிலைமை வேறு விதமாக போய்க் கொண்டிருக்கிறது. சரத்குமார் தற்போது நடித்துள்ள ‘சென்னையில் ஒருநாள் 2’  படத்திற்கு தியேட்டர் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விஷாலின் மிரட்டலுக்கு பணியாத தமிழ்ராக்கர்ஸ் செய்த வேலையை பார்த்திங்களா?

அதாவது, வருகிற 15-ந் தேதி இப்படத்தை திரையிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படமும், ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படமும் ரிலீசாகவிருப்பதால் சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்தது

எனவே, இப்படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். விஷாலின் ‘துப்பறிவாளன்’ படம் சுமார் 500 திரையரங்குகளையும், ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ சுமார் 300 திரையரங்குகளையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான், இப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.