ரஜினியை ஹீரோவாக்கிய பழம்பெரும் தயாரிப்பாளருக்கு இந்த நிலையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் ‘பைரவி’. இந்த படத்தில் ரஜினிகாந்த்தை ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்தவர் பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் என்பவர். இவர் கே.பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்ததோடு ஒருசில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் கலைஞானம் அவர்களை ரஜினி உள்பட யாரும் அவரை வந்து உடல்நலம் விசாரித்து தேவையான உதவிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது

கலைஞானம் அவர்கள் உடல்நலமின்றி இருப்பது தெரிந்தவுடன், உடனே தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேரில் சென்று அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தது மட்டுமின்றி அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசனும் இருந்துள்ளார். ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய கலைஞானம், கவனிப்பாரின்றி இருப்பது அனைவரையும் வருத்தமடைய செய்திருந்தாலும் விஷால் நேரில் வந்து பார்த்து உதவி செய்தது ஆறுதலாக காணப்படுகிறது