தனக்கு நடக்கப்போகும் திருமணம் ஒரு காதல் திருமணம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு நடிகையை காதலிக்கிறேன் என கொளுத்திப் போட்டார். அதன்பின், லட்சுமிமேனனுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதேநேரம், அவரும் இல்லை.. நடிகை வரலட்சுமியும் அவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். இருவரும் காதலிக்கிறார்கள் என செய்தி கசிந்தது. பொதுமேடைகளில் லட்சுமிகரமான நடிகையை திருமணம் செய்வேன் என பேட்டியும் கொடுத்தார். ஆனால், வரலட்சுமியுடனான காதல் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் - துப்பறிந்த விஷால்

அதன்பின், நடிகர் சங்க புதிய கட்டிடத்தை கட்டிய பின் அதில் திருமணம் செய்வேன் எனக் கூறி வந்தார். தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

இதையும் படிங்க பாஸ்-  தமன்னா- விஷால் ஜோடியின் புதிய பட படப்பிடிப்பு குறித்து அப்டேட் ! ..

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘என் திருமணம் தொடர்பாக வெளிவந்த செய்தி உண்மைதான். ஒரு நிகழ்ச்சியில் அனிஷாவை சந்தித்தேன். பார்த்தவுடன் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டேன். இரு வீட்டின் பெற்றோர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விரைவில் நிச்சயதார்த்தம்.. நான் கூறியது போலவே நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணம் செய்து கொள்வேன்” என அவர் கூறினார்.