ஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு ரஜினி, கமல் உள்பட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விழாவின்போது விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் டிரைலர் மற்றும் அவர் நடித்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளதாம்

இந்த நிலையில் இது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவா? அல்லது விஷாலின் திரைப்பட கலைவிழாவா? என்று முனங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் தவிர வேறு படங்களின் புரமோஷன் இந்த விழாவின் இடையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.