எம்.ஜி.ஆர் பட தலைப்பை கைப்பற்றிய விஷால்

விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு நாளை நமதே என்று பெயரிடப்பட்டுள்ளது

சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துவரும் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து ஒரு படத்தினை தயாரிக்கின்றனர். இதில் விஷால் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முதன்முதலில் 3 வேடங்களில் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு நாளை நமதே என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  நாயகி மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு வேகமாக நடைபெற்றுவருகிறது.