நடிகா் விஷாலுக்கு அரசியலில் விருப்பமில்லையாம்!

08:20 மணி

மிஷ்கின் இயக்கத்தில்   துப்பறிவாளன் படத்தில் நடித்து வரும் விஷால் இந்த படத்தின் டீசா் வெளியீட்டு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட விஷால் பேசினாா். இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய், ரகுல் ப்ரீத்தி சிங், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா்.

துப்பறிவாளன் படத்தின் டீசா் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் செய்தியாளா்களிடம் பேசியதாவது,. எனக்குக அரசியல் அவ்வளவாக விருப்பமில்லை. ரஜினியும், கமலும் இருவரும் அரசியல் குறித்து கருத்து தொிவித்து வருகின்றனா். இவா்கள் இருவரும் அரசியலுக்கு வருவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னா் தான் அது குறித்து எனது கருத்துக்களை தொிவிப்பேன் என்று கூறியிருந்தாா். தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன் என்றும் எனது திருமணம் பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தொிவித்தாா். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கமல் கூறி வரும் கருத்துக்களுக்கு தமிழக அரசியல் அமைச்சா்களும் இடையே நடைபெற்று வருவது வெறும் கருத்து போா் தான். தமிழ் திரையுலகம் கமலுக்கு ஒரு பிரச்சனை என்றால் கட்டாயம் அவருக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் தொிவித்தாா் விஷால்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com