தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடனான சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு மீட்டிங் முடிந்தது. எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைத்து உள்ளோம். VPF charge கட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். அதன் பற்றியும் ஆன்லைன்லில் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற செயல்களை பற்றி சில முக்கிய முடிவுகள் பற்றி பேசியுள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்து பேசி முடிவு எடுக்கவுள்ளோம். இன்று இயக்குநர்களுடனான சந்திப்பு முடிந்தது. நாளை ஒளிப்பதிவாளர்களுடனான சந்திப்பு உள்ளது. அதற்கு மறுதினம் அணைத்து நடிகர்களுடனான சந்திப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்தமும் படங்கள் வெளியிடப்படாமல் இருப்பதும் இந்த Industry நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் தான். வேலை நிறுத்தம் முடிந்து தொடங்கும்போது எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ஒரு தயாரிப்பாளராக என்னுடைய விருப்பம்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை தயாரிக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு விவசாயி போன்றவர்கள் தான் தயாரிப்பாளர்கள். ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களோ அதே நிலைமைக்கு தான் தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த Industry – யில் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம். எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. VPF Charges நீக்க பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வேலை நிறுத்தம் குறித்து கமல்ஹாசன் சாரிடம் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததை போன்று ரஜினிகாந்த் சாரிடமும் நேரில் சென்று விளக்கம் அளிக்கப்படும். இது மூன்றாவது வேலைநிறுத்தம் ஒவ்வொரு முறையும் இவர்கள் எது வரைக்கும் தாக்கு பிடிப்பார்கள் என்று குறிப்பிட்ட சில பேர்கள் முயற்சிக்கிறார்கள்.

இந்த முறை மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அணைத்து Industry –யும் ஒற்றுமையாக உள்ளது. இந்த வேலைநிறுத்ததை முடிவுக்கு கொண்டு வருவது தியேட்டர் உரிமையாளர்கள் QUBE நிறுவனத்திடம் பேசி நாங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கும் பொருட்டு வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்.