லிங்குசாமியின் இயக்கத்தில், தயாரிப்பாளர் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. ‘இரும்புத்திரை’,’துப்பறிவாளன்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு விஷால் நடித்திருக்கும் படம் இதுவாகும்.

‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தின் இசை வெளியீடு வரும்செப்டம்பர் 24-ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளது.

கடந்த 2005-ல் வெளியான ‘சண்டக்கோழி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  மாரி2 படத்துக்கு கட்டை போடும் விஷால் - டிச .21 வெளியாகுமா?

தற்போது நடிகர் விஷால், ‘சண்டக்கோழி 2’ படத்தின் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பினை வெளியட்டார். இதன்படி இப்படத்தின் இசை வெளியீடு வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பில் உருவாகியுள்ள ‘கம்பத்து பொண்ணு’ பாடலை படக்குழு வெளியிட்டது.

இதையும் படிங்க பாஸ்-  யார் மேல கை வக்குற... மன்சூர் அலிகானை தள்ளிக்கொண்டு போன போலீஸ்

இதையடுத்து, வரும் செப் 24-ஆம் தேதி இப்படத்தின் மொத்த பாடல்களையும் படக்குழு வெளியிட உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.