Home சற்றுமுன் பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2

பாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சண்டக்கோழி’. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஷாலும், லிங்குசாமியும் முன்வந்தனர். முன்னதாக தொடங்கப்படுவதாக இருந்த இப்படம் சில பிரச்சினைகளால் தள்ளிக் கொண்டே போனது. விஷாலும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்ததால் படத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், விஷால்-லிங்குசாமி இணையும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மதுரை திருவிழா போன்று செட் அமைக்கப்பட்டு இதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கிறார்களாம். இந்த செட் சுமார் ரூ. 6 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். ராஜ்கிரண் உள்ளிட்ட முந்தைய பாகத்தில் நடித்த சிலரும் இப்படத்தில் இணையவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார்.