கோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி

தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர், நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் என எந்நேரமும் பிசியாக இயங்கி வரும் விஷால், இதனூடே மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருடன் பிரசன்னா, வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்களே இல்லாமல் புதுமையான முறையில் படமாக்கியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் விஷால், நடிப்பு விஷயத்திலும் ரொம்பவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து கோடிகளை சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. இந்த திரையுலகத்தை காப்பாற்றுவதற்காக தான் கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர்கூறும்போது, நான் நடிக்கும் இரண்டு படங்கள் தள்ளிப்போனது எனக்கு நஷ்டம்தான். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்தால் பல படங்களில் நடித்து ரூ.20 கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பேன். ஆனால், அப்படி நான் கோடிகளை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவது மட்டும் இப்போதைக்கு எனது குறிக்கோள். கோடிகள் முக்கியமல்ல, எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.