தமிழ் திரையுலகில் பரபரப்பாக இயங்கி வருபவர் நடிகர் விஷால். ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் பம்பரமாக சுழன்று வருகிறார்.

விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் உண்டு. விக்ரம் கிருஷ்ணா நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது மீண்டும் விஷால் வீடு விழாகோலம் பூண்டுள்ளது. காரணம் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு திருமணம். பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷ் தான் மணமகன். 

ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் திருமணம் செய்வதாக கடந்த ஆண்டே இருவீட்டாரும் பேசி முடிவுசெய்தனர். அதன்படி இவர்களது திருமணம் வருகிற 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்துவருவது குறிப்பிடத்தக்கது.