சண்டைக் கோழி2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது:-

25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது.கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார்.அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள்.லிங்கு சாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம்.என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம்.ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார் அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர்.அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன்.அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது.

கீர்த்தியுடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. 2000பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்.பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி.அனல் அரசு மாஸ்டர் மூலியமாக உடலில் 100 தையல் வந்து விட்டது.தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோல் தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய,பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்றார் விஷால்.