நடிகை தமன்னா மீண்டும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இருவரும் கத்தி சண்டை படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர்.

தற்போது சுந்தர் சி இயக்கும் படம் மூலம தமன்னா, விஷால் மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளனர்.

சுந்தர் சி விஷாலை வைத்து 2015ம் ஆண்டு ஆம்பள படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் விஷாலை வைத்து மீண்டும் புதிய படத்தை எடுக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். இந்த படத்தை டிரெண்ட்ஆர்ட்ஸ் புரொடக்சன் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார்.

பிப்ரவரி மாத மத்தியில் ஷுட்டிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தாமதாக மார்ச் 15ம் தேதி ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளதாக உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விஷால் தற்போது வெங்கட்மோகன் இயக்கத்தில் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது.