விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்  ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஷால் ஒரு துப்பறியும் நிபுணராக நடித்திருந்தார். படத்திற்கான விமர்சனங்களும் ஓரளவுக்கு பாசிட்டிவாக அமைந்திருப்பதால், திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கணிசமான வசூலை இப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து, தயாரிக்க விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மலேசியாவில் ‘துப்பறிவாளன்’ படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஷால் இதை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தையும் மிஷ்கினே இயக்கப் போகிறாரா? என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

விஷால் தற்போது ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘இரும்புத்திரை’ என்ற படமும் விஷால் நடிப்பில் வேகமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.