நடிகர் விஷால் தன்னுடன் இருப்பவர்கள் அனைவரையும் யூஸ் பண்ணிவிட்டு கழட்டிவிட்டு விடுவார் என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலர் இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷும் இணைந்துள்ளார்.

வில்லன் நடிகராக அறிமுகமான இவர் இப்போது கதாநாயகனாக சிலப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கொச்சின் ஷாதி அட் சென்னை 03 இன்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மலையாள இயக்குனர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் நடிகர் சங்கத் தேர்தல் பற்றி பேசினார்.

அப்போது ‘ விஷாலைத் தவிர வேறு யார் தேர்தலில்  நின்றாலும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். விஷால் எல்லோரையும் யூஸ் பண்ணிவிட்டு பின்னர் கழட்டி விட்டு விடுவார். இந்த லிஸ்ட்டில் உதயா, ரித்திஷ், வரலட்சுமி உள்பட நிறைய பேர் இருக்கிறார்கள்.  வரலட்சுமியைக் குறிப்பிட்டது நட்பு ரீதியில்தான்’ எனக் கூறினார்.

விஷாலும் வரலட்சுமியும் சில காலம் காதலர்களாக வலம் வந்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரும் பிரிந்து இப்போது விஷால் தெலுங்கு தொழிலதிபரின் மகள் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார்.