சண்டக்கோழி 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது வரும் அக்டோபர் 18 பூஜா ஹாலிடேஸில் இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா படப்பிடிப்பு முடிந்தாலும் அனல் பறக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் வரலட்சுமி, அனலரசு, விஷால், லிங்குசாமி நால்வரும் ஒரு இடத்தில் நின்று சின்ன சின்ன காமெடி ரியாக்சன்கள் செய்வதுபோல செய்து அதை அனிமேஷன் பைலாக மாற்றியுள்ளனர் அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் வரு.

இவர்களுடன் படப்பிடிப்பில் பணிபுரிந்தது இனிமையாகவும் சிரிப்பான நாட்களாகவும் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.