Vishal’s Ayogya Trailer : ‘சண்டக்கோழி 2’ படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அயோக்யா’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இதில் விஷால் போலீஸாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளாராம். மேலும், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், பூஜா தேவரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ‘டெம்பர்’ எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்காம்.

‘லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். படம் வருகிற மே 10-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்போது, இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.