சாட்டிலைட் டிவி, இணையதளம்: விஷாலின் அதிரடி திட்டத்தால் பெரும் பரபரப்பு

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷாலின் அதிரடி நடவடிக்கைகளால் பல நிறுவங்களின் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமையை 99 வருடங்களுக்கு பெற்று மாதத்திற்கு இரண்டு தடவை அந்த படத்தை டிவியில் ஒளிபரப்பி கோடிக்கணக்கில் இதுவரை சாட்டிலைட் டிவி நிறுவனங்கள் பெற்று வந்தன. இதற்கு ஆப்பு வைக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கமே தற்போது புதியதாக இரண்டு சாட்டிலைட் சேனல்கள் தொடங்கவுள்ளதாம். ஒன்றில் புதிய படங்களும் இன்னொன்றில் புதிய படங்களின் பாடல்களும் ஒளிபரப்பப்படும்.

இதேபோல் திரையரங்குகளில் டிக்கெட் புக் செய்ய என்று தனியாக ஒரு இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்கவுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் எந்தவித நேரடி மறைமுக கட்டணங்களும் இல்லை. திரையரங்கு கவுண்டரில் என்ன விலையோ அதே விலையில் டிக்கெட்டுக்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளங்களின் வருமானம் அடியோடு பாதிக்கப்படும் என தெரிகிறது.