இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்க இருக்கும் சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டைக் கோழி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் லிங்குசாமி இறங்கினார். நடுவில் சில தடங்கல்கள் ஏற்பட்டதால், அந்த புராஜெக்ட் தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள அப்படத்திற்கான வேலை தற்போது துவங்கியுள்ளது.  அதற்காக சென்னையில் உள்ள பின்னி மில்லில் ரூ.6 கோடி செலவில் மதுரை போன்று ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.  அப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

விஷாலுக்கு இப்படம் 25வது படம் ஆகும்.. இப்படத்தை விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனமே தயாரிக்கிறது.