பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கும் புதிய படமான ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படத்தில் நடிக்க சமீபத்தில் விஷ்ணு மற்றும் தமன்னா ஒப்பந்தமாகியிருந்தனர். முதல்முதலாக விஷ்ணு-தமன்னா ஜோடி சேரவுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விஷ்ணு விலகிவிட்டார். இதனை அவர் தனது டுவிட்டரிலும் உறுதி செய்தார். இதுகுறித்து விசாரித்தபோது விஷ்ணுவில் கால்ஷீட் தேதி தான் அவர் இந்த படத்தில் இருந்து விலக காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் விஷ்ணுவின் கேரக்டரை விட தமன்னாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை மாற்றப்பட்டதாலே அவர் விலகியதாக கூறப்படுகிறது.