நடிகை அமலா பால், விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சஷன் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் வரும் 5ம்தேதி ரிலீஸ் ஆகிறது.இப்படம் குறித்து பேசிய அமலா பால் இயக்குநர் ‘ராட்சசன்’ கதையைச் சொன்னபோது குழப்பமாக இருந்தது. விஷ்ணு விஷால் போனில் தொடர்புகொண்டு கதையை விளக்கிச் சொன்னார்.

வித்தியாசமான கதையாக இருந்தது. பிடித்துப்போனது. எனது கதாபாத்திரமும் அழுத்தமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தை ராம்குமார் இயக்குகிறார். ஜி.டெல்லிபாபு தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.