விஷ்ணு விஷால் வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றியை அடுத்து மாவீரன் கிட்டு படத்தில் நடித்தாா்.  தற்போது கதாநாயகன் என்ற படத்தின் பிசியாக நடித்து கொண்டிருக்கிறாா். இந்நிலையில் அவருக்கு இன்று   ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கும் ரஜினி நடராஜ் 2011ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் திருமணம் நடந்தது. நடிகா்  பிரபல நடிகரும், இயக்குநருமான கே.நடராஜின் மகள் ரஜினி  நட்ராஜை விஷ்ணு விஷால் கல்லூாியில் படிக்கும் போது நான்கு வருடங்கள் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டாா்.

இன்றைய நாள் நடிகா் விஷ்ணு விஷாலுக்கு சந்தோஷமாக தொடங்கியுள்ளது. இந்த சந்தோசமான நேரத்தில் விஷ்ணு தனது ட்விட்டா் வலைதளத்தில் “இந்த தருணம் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்றும் எனது மனைவி ரஜினிக்கு ஆண்டு குழந்தை பிறந்துள்ளது”  இதை மறக்க முடியாது என்று தொிவித்துள்ளாா்.

மேலும் விஷ்ணு விஷால் கதாநாயகன் மற்றும் “சின்ட்ரல்லா”, “இடம் பொருள் ஏவல்” போன்ற படங்களில் நடித்து வருகிறாா்.  அதுமட்டுமில்லங்க, இவருடைய ரசிகா் பெரும் மக்களும் வாழ்த்துக்களை தொிவித்து வருகின்றனா். சினிமா பிரபலங்களும், நண்பா்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனா்.