பிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு விஷால் – கேத்ரீன் தெரசா: 100 நாட்கள் தங்க திட்டமா?

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் இறுதியில் நாளை என்ன மாதிரியான காட்சிகள் இடம்பெறப் போகிறது என்பதற்கான புரோமோ வெளியிடப்பட்டது. அதில், விஷ்ணு விஷாலும், கேத்ரீனா தெரசாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது போலவும், அவர்கள் ரீ-என்ட்ரி என்று சொல்லப்படும் வைல்டு கார்டு மூலமாக இந்த வீட்டுக்குள் நிரந்தரமாக தங்கப்போவது போலவும் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

உண்மையில் அவர்கள் 100 நாட்கள் அந்த வீட்டுக்குள் தங்கப் போகிறார்களா? என்று ரசிகர்கள் ஒருபக்கம் குழம்பிப் போயிருக்கும் நிலையில், மறுபக்கம் இது ஒரு விளம்பரத்துக்காகத்தான் என்றும் சொல்லி வருகிறார்கள். விஷ்ணு விஷால் – கேத்ரீனா தெரசா இருவரும் நடித்த ‘கதாநாயகன்’ படம் நேற்று  திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை புரோமோஷன் செய்வதற்காகத்தான் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ‘தமிழ் தலைவாஸ்’ கபடி அணியை புரோமோஷன் செய்வதற்காக அந்த அணியைச் சேர்ந்த அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே, அதுபோல், விஷ்ணு விஷாலும், கேத்ரீனா தெரசாவும் தங்கள் படத்தின் புரோமோஷனுக்காகத்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என்பதுபோல் தெரிகிறது.