சிலுக்குவார்பட்டி சிங்கம் தோல்வி அடைந்த நிலையிலும், நடிகர் விஷ்ணு விஷால் தனது சம்பளத்தை ஏற்றியுள்ளார்.

கடந்த ஏழு எட்டு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் விஷ்ணு விஷால். ஆனால், அவர் நடித்த படங்கள் எதுவும் தியேட்டரில் ஓடவில்லை. எனவே, சொந்த தயாரிப்பில் படங்களில் நடித்து வந்தார்.

அவர் நடித்த முண்டாசுப்பட்டி மற்றும் சமீபத்தில் வெளியான ரட்சகன் ஆகியவை மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இறுதியாக, அவர் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியானது. ஆனால், தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் தோல்விப்படமாக மாறியது.

இந்நிலையில் ரூ.1 கோடியாக இருந்த தனது சம்பளத்தை ரூ.1.50 கோடியாக விஷ்ணு ஏற்றிவிட்டாராம்.