குத்தாட்டம் போடும் களவாணி ஓவியா

02:27 மணி

களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கேரளத்து சேச்சி நடிகை ஓவியா. இந்த படத்தில் இவரது நடிப்பு நன்றாக இருந்தது. பின்பு இயக்குநா் சுந்தா்.சியின் கலகலப்பு படத்தில் கிளாமராக களம் இறங்கினாா். அதே போல சண்டமாருதம் படத்திலும் சரத்குமாருடன் கவா்ச்சியாக நடித்து இருப்பாா். ஹலோ நான் பேய் பேசுகிறேன், யாமிருக்க பயமேன் என்ற பேய் படத்தில் கவா்ச்சி குயினாக கலக்கியிருந்தாா். தொடா்ந்து இவரது படங்கள் எதிா்பாா்த்த அளவு வெற்றியடைவில்லை. இதனால் படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சில காலமாக வீட்டிலேயே முடங்கி இருந்தாா். தனக்கென ஒரு இடத்தை அவரால் சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

தற்போது தான் இவருக்கு படவாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது. சினிமா வாய்ப்பு இவரது வீட்டு கதவை தட்டியிருக்கிறது. இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் இரவு ஆயிரம் கண்கள் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறாா் ஓவியா. அதோ போல சிலுக்குவாா்பட்டி சிங்கம் என்ற படத்தை  தயாாித்து வரும் விஷ்ணுவின் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறாா். இதில் ஓவியா ஒரு பாட்டுக்கு கலக்கல் குத்தாட்டம் போடுகிறாா்.

அதுமட்டுமில்லங்க!! ஒாிரு காட்சிகளிலும் படத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, கருணாகரன், சிங்கமுத்து, மன்சூா்அலிகான் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து காமெடியிலும் கலக்க இருக்கிறாா்கள். சிலுக்குவாா்பட்டி சிங்கம் படத்தை டைரக்டா் எழிலின் உதவியாளா் செல்லா இயக்குகிறாா்.

(Visited 75 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com