கமலஹாசனின் படங்கள் என்றாலே பிரச்சினைதான் அதிலும் அவரின் விஸ்வரூபம் படம் மிகப்பெரும் மத ரீதியான பிரச்சினைகளுக்கு பின்பே வந்தது. அவரின் விஸ்வரூபம் 2 திரைப்படம் பல வருடங்களாக வரும் வரும் என்று வருவது போல் தெரியவில்லை.

இப்போதுதான் விஸ்வரூபம் 2வில் சில காட்சிகளை எடுத்து அதை சீக்கிரத்தில் வெளியிடவேண்டும் என டீசர், டிரெய்லர்களை புரோமஷனுக்காக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கமல் நடிப்பதாக இருந்த மர்மயோகி படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிப்பதாக இருந்து அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம்2 படத்தை வெளியிடகூடாது தாங்கள் நிறுவனம் கொடுத்த 4 கோடி பணத்தை திருப்பி தர வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.