கமலஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று வெளியானது. முதல் பாகத்தை வெளியிட கமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் கடந்த 2013ம் ஆண்டு இப்படம் வெளியானது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இப்படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  அர்ச்சகர்கள் நியமனம் : கமல்ஹாசன் கருத்து

விஷுவல் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸுக்காக இந்த படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவு இவைகள் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாகத்தை விட இந்த படம் சூப்பர் எனவும் படத்தின் இரண்டாம் பாதி மிக அருமை எனவும் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  விஜயகாந்த் ஆதரவு கிடைச்சாச்சு.. அடுத்து ரஜினி,கமல்.. பாக்கியராஜ் அதிரடி

கமலஹாசனின் தாயாராக நடித்துள்ள பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி வகீதா ரஹ்மான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய உளவாளியாக கமல் இதில் சிறப்பாக நடித்துள்ளாராம்.

முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கமல் எடுத்த அதிரடி முடிவு