விஸ்வரூபம்’ ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு பலவிதமான தடைகளை தாண்டி வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் முதல் பாகம் வெளியான சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தாமதம் ஆகி வந்த இந்த படத்தின் பணிகள் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த படம் இவ்வருடம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். கமலின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்பதில் எவ்வித சந்தோஷமும் இல்லை.