கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. அதுபோல விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த படம் தூங்காவனம். கமலுக்கு இந்த படத்திற்கு பிறகு இதுவரை எந்த படமும் இன்னும் வெளியாகவில்லை. கமல் ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வருடமாக பிசியாக இருந்தார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தனது அரசியல் பயணத்து பிள்ளையார் சுழி போட்டார். தற்போது மக்கள் மய்யம் என்று தனது புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களம் இறங்கி உள்ளார். தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த பிக்பாஸ் சீசன் 2 ஜூன் 17ம் தேதி ஒளிப்பரப்பாக இருக்கிறது.

vishwaroopam 2 movie latest news

விஸ்வரூபம் படத்தினை கமல் இயக்கி அவரே நாயகனாக நடித்தும் இருந்தார். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். இந்த படத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். விஸ்வரூபம் 2 படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இணைந்து கதையை எழுதியுள்ளனார. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டிரைலர் இன்று 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி விஸ்வரூபம் 2 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தின் டிரையிலரை தமிழில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்ரும், இந்தியில் அமீர்கான் ஆகியோர்கள் வெளியிடவுள்ளனர்.