எப்போது வரும் என்று கமல் ரசிகா்கள் ஆவலோடு எதிர்பார்த்த விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளதை தொடர்ந்து ரசிகபெருமக்கள் மத்தியில் . நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

v

விஸ்வரூபம் 2 படமானது வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால் அதை கணக்கில் கொண்டு விஸ்வரூபம் வெளியாக உள்ளது. இன்று இந்த படத்தின் டிரைலரை ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது ரசிகா்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருவதோடு அதை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த டிரைலரில் நாசர் பள்ளிக்கூடத்திற்கு போகணும், ஜலால் கல்லூரிக்கு போகணும் அது தான் சரி என்று கமல் குரலுடன் தொடங்குகிறது.

எந்த மதத்தையும் சார்ந்திருப்பது தவறில்லை. ஆனால் தேசத் துரோகியாக இருப்பது தவறு என்று பன்ச் டயலாக் பேசுகிறார் கமல். அதன் பின் காட்சிகள் வருகிறது. அதனை தொடர்ந்து கமலின் ஹைலைட்டான லிப்லாக் முத்த காட்சி வருகிறது. பூஜா குமாருக்கு முத்தம் கொடுக்கிறார். சண்டை போடுகிறார். அதுபோல ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கிறது.