கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2′ திரைப்படம் ரஜினியின் ‘காலா’ வெளியாகும் அதே ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெகுவிரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ், இந்தி டிரைலர் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் மிக விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

அனேகமாக இன்னும் ஓரிருநாட்களில் விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் இந்த டிரைலர் உலகநாயகன் டியூப் என்ற கமல்ஹாசனின் யூடியூப் தளத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.