கமலஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் பல கட்ட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மரணத்தால் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில் எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 15 ல்வெளிவருமா என்பது சந்தேககத்திற்குரியதாகி உள்ளது.

ஏற்கனவே சினிமா சார்ந்த சில விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கமல் தரப்பில் இருந்து வரவில்லை.