விஸ்வரூபம் 2: பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்

விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு பலவிதமான தடைகளை தாண்டி வெளிவந்து வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் முதல் பாகம் வெளியான சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தாமதம் ஆகி வந்த இந்த படத்தின் பணிகள் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில் இப்படம் துவக்கப்பட்டது. படம் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார் ஆஸ்கர் ரவிசந்திரன். இதனால் இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இப்படத்தினை தானே வெளியிட கமல்ஹாசன் வெளியிட முடிவு செய்தார். இதனால் பிரச்னைகள் முடிவுக்கு வந்து,  இவ்வருடம் தீபாவளி தினத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.