தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், படம் நன்றாக உள்ளதாக
டுவிட்டரில் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. விவேகம் சரியாக போகாததால் இந்த படம் ஹிட்டாகும் என ரசிகர்கள் பெரிதும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை விஸ்வாசம் காப்பாற்றி உள்ளதாகவே தெரிகிறது. குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் விஸ்வாசம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவை அப்படியே உங்கள் பார்வைக்கு…