விஸ்வாசம் படத்தின் டீசர் குறித்து சென்சார் போர்டில் பணிபுரியும் உமைர் சாந்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

‘சிறுத்தை’ சிவா மற்றும் ‘தல’ அஜித் கூட்டணியில் உருவாகி வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்ற ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தினைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்து மாஸாக உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

கடந்த 25ம் தேதி விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்று, யூடியூபில் ஹிட் அடித்தது.

ரசிகர்கள் பலரும் இப்படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் என காத்துக்கொண்டிருக்கும் வேலையில் முக்கிய பிரபலம் ஒருவர் டிவீட் செய்துள்ளார். சென்சார் போர்டில்  முக்கிய  பொறுப்பில் இருக்கும் உமைர் சாந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் டீசர் ரிலீசுக்கான நாள் உறுதியாகி விட்டது, விரைவில் டீசர் வெளியாகும் என குறியிட்டுள்ளார். இதனைப்பார்த்த தல ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.