பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்று அதன் பின் தனது சினிமா வேலைகளில் மும்முரமாக பணியாற்றி வருகிறார் கமல். இதற்கிடையில் அரசியலிலும் கால் பதிக்க உள்ளார். இதனால் விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வந்தது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள கமலின் விஸ்வரூபம் 2 வருகிற ஏப்ரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

ரசிகா்கள் ஆவலோடு எதிர்பார்த்த விஸ்வரூபம் படமானது தாமதமாகி கொண்டிருக்கிறது. முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியான போதே அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்திற்கு பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் இரண்டாம் பாகம் எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்கிடையில் பணநெருக்கடி ஏற்பட்ட காரணத்தால் படத்திற்கு மேன்மேலும் சிக்கல் ஏற்பட்டது. கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், தூங்காவனம், பாபநாசம உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன. இதனால் விஸ்வரூபம் 2 எப்போதும் வெளியாகும் என்ற ஆவல் ரசிகா்கள் மத்தியில் ஏற்பட்டது.

ரசிகா்களின் ஆவல் நிறைவேற போகிறது. ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஏற்றுக்கொண்டதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஸ்வரூபம் 2 படத்தின் போஸ்டா் அண்மையில் வெளியாகி ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. காலாவுக்கு போட்டியாக களம் இறங்கும் விஸ்வரூபம்2 . ஆனால் இதுபற்றி அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதால் கால தாமதம் ஆகிறது. காலா படமும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.