சூப்பர்ஸ்டார் ரஜினி என்ன செய்ய முடிவெடுத்துள்ளாரோ, அதை எப்படியோ தெரிந்து கொண்டு அதை அவருக்கு முன்னாள் செய்யும் வழக்கத்தை கடந்த சில மாதங்களாக கமல் செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினிக்கு முன்னரே அரசியல் கட்சியை தொடங்கியுள்ள கமல், தற்போது ரஜினியின் ‘காலா’; படம் ரிலீஸ் ஆகும் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு முன்னரே தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலரை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பை கமல் இன்று வெளியிட்டுள்ளார். அனேகமாக இந்த படம் காலா ரிலீஸ் ஆகும் அதே தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற ஒரு வதந்தியும் கோலிவுட்டில் பரவி வருகிறது.